காவத்துறையினருக்கு பல்கலைக்கழகம் – பிரதமர்

காவற்துறை சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் காவற்துறை குற்றவியல் விஞ்ஞானத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் கற்பதற்காக பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனடிப்படையில், காவற்துறை குற்றவியல் நியதிகள் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காவற்துறை திணைக்களத்தில் பணிப்புரிவோர் மற்றும் அந்த துறை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும்.

மேலும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய வெளிவாரி மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.