யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி – சந்தனதரை பகுதியில் கிணறொன்றின் நீரியந்திரத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேர், உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலோலி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.