பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | நுவரேலியா ) -கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்தும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேரூந்து ஒன்றும் கினிகத்தேனை, தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.