பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

கியூபானின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.