கிராம சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(FASTNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளதுடன், தமது தனிப்பட்ட கைடயக்கத் தொலைபேசி ஊடாக கடமைகளில் ஈடுபடாதிருக்கவும் தீர்மானித்துள்ளனர்.