கிரிக்கெட் அணியினது தோல்வியினை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம் எனவும், கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தால் அதற்கு அதன் தலைமை பொறுப்புக்கூற வேண்டும் என்பது போலவே, தேர்தலில் தோற்றால் குறித்த கட்சியின் தலைவர் பொறுப்புக்கூற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, இலங்கை கிரிக்கெட் அணியானது தொடர்ந்தும் தோல்வியடைவதில்லை என்றும், வெற்றி மற்றும் தோல்வி இரண்டினையும் ஒரே நோக்கில் பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.