கிரிக்கெட் விளையாட்டு தனது வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொடுத்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்த்தனே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இடைக்கால துடுப்பாட்ட பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பாக பேசிய அவர், “நான் கிரிக்கெட்டை ரசித்து ஆடுகிறேன். வெற்றி, தோல்வி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, ஏமாற்றம், மகிழ்ச்சி என பலவற்றை அதில் இருந்து கற்றுக் கொண்டேன்.
அதே நேரம் எனது தனிப்பட்ட வாழ்க்கையுடன் கிரிக்கெட்டை இணைக்கக் கூடாது என்பதையும் அறிந்து கொண்டேன். கிரிக்கெட் எனது இதயத்துடிப்பை போன்றது. பலதரப்பு மக்களும் கிரிக்கெட்டை ஆர்வமாக பார்த்து ரசிக்கின்றனர்.
நான் இலங்கை அணிக்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அந்த நாட்கள் மறக்க முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார்.
மேலும், பல முக்கியமான போட்டிகளில் இறுதிப் போட்டியில் வந்து தோல்வி பெற்றது எப்போதும் ஏமாற்றம் தந்ததாகவும், 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இறுதிப் போட்டியில் தவறவிட்டது அதிக ஏமாற்றம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும், 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை வென்றது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் என்று குறிப்பிட்ட ஜெயவர்த்தனே, அது ஒட்டுமொத்த அணியின் உழைப்பு என்றும் கூறியுள்ளார்.