கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு சனத் ஜயசூரிய?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு முன்னாள் இலங்கைஅணியின் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னரும், கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நிறுவப்படுவதற்கு முன்னதாக சனத் ஜயசூரிய தெரிவுக்குழுவின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

2014ம் ஆண்டு டுவன்ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஆசிய கிண்ணப் போட்டித் தொடர் மற்றும் 2014ல் இங்கிலாந்து போட்டித் தொடரில் வெற்றியீட்டிய இலங்கை அணியை தெரிவு செய்த தெரிவுக்குழுவின் தலைவராக சனத் ஜயசூரிய கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.

தற்போது இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா கடமையாற்றி வருகின்றார்.

எதிர்வரும் 30ம் திகதி வரையில் அரவிந்த பதவி வகிப்பார் எனவும் அதன் பின்னர் சனத் ஜயசூரிய அந்தப் பதவிக்கு தெரிவாகக் கூடும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.