இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று(01) பகலிரவு போட்டியாக இடம்பெற்ற நிலையில் இரவு மைதானத்தில் சற்று பதற்ற நிலைமை ஏற்பட்டதாகவும் இதன்போது 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தம்புள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலைமையினை சுமுகமாகத் தீர்க்க முன்வந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டாரவும் தாக்குதலுக்கு உள்ளாகி தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் மைதானத்திற்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரி ஒருவருக்கும் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் போத்தலினால் தாக்கியதால் அவரும் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய(01) போட்டியில் தென்னாபிரிக்க அணியானது 04 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரில் 5:2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
R.Rishma