கிரிக்கெட் மைதானத்திற்கு முற்றுப் புள்ளியாக ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று நாடு திரும்புகிறார்…

இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று(23) இரவு தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பவுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான நேற்றைய(22) போட்டியில் மேத்யூஸ் இனது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் உபாதைக்குட்பட்டிருந்தார்.

இதன்படி, இலங்கை அணித்தலைவருக்கு இரு வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்கு மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.