கிரிக்கெட் வாரியத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து மாலிங்க வாய்திறந்தார்

“எனது 12 வருடகால விளையாட்டில் ஒருபோதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் (ICC) அபராதங்களுக்கோ,போட்டித்தடையிற்கோ இற்றைவரை நான் உள்ளாகவில்லை. நான் எப்போதும் விளையாடியது விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைவாகவேயாகும்.

IPL என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் ஏனைய நாட்டிலுள்ள கிரிக்கெட் வாரியங்களுடனான கலந்துரையாடலில், புரிந்துணர்வில் இடம்பெறும் ஒரு போட்டியாகும். என்னை ஒரு அணி விலைபேசியபின் அவ்வணியின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டும்.

மேலும், நான் இந்தியா சென்று IPL இனால் உத்தியோகபூர்வ வைத்திய பரிசோதனைக்கு உள்ளாகினேன். ஏனென்றால் அவ்வாறு நான் வைத்திய பரிசோதனைக்கு முகங்கொடுத்தது வீரர் என்ற வகையில் எனது கடமை என்பதாலேயாகும். ஆனால் இதை எதையுமே அறியாது சிலர் என்னை வீழ்த்துவதிலேயே குறியாய் இருக்கின்றமை மிகவும் வேதனையே என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் மாலிங்க விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.