கிறிஸ் கெய்லுக்கு 03 இலட்சம் ஆஸி.டொலர் இழப்பீடு…

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லுக்கு 3 லட்சம் அவுஸ்திரேலிய டொலரை இழப்பீடாக வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போதே கிறிஸ் கெய்ல் அவுஸ்திரேலிய பெண் பணியாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகம் நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியது.

இந்த சம்பவம் தொடர்பில் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைக்கப்பட்டுள்ளதாக கூறி கிறிஸ் கெய்ல் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் கிரிஸ் கெய்ல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அண்மையில் நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும் கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகை அறிவிக்கப்படாதிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவருக்கு 3 லட்சம் அவுஸ்திரேலிய டொலரை இழப்பீடாக வழங்குமாறு, குற்றச்சாட்டை முன்வைத்த ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.