ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் “காற்றின் மொழி” படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் பாடல் ஒன்று வரவேற்பை பெற்று வருகிறது.
ஹிந்தி முன்னணி நடிகையான வித்யா பாலன் நடித்த ‘தும்ஹாரி சூளு’வின் தமிழ் ரீமேக்கான இதில் வித்யா பாலன் நடித்திருந்த வானொலி தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்,படத்தொகுப்பாளராக பிரவீன்.கே.எல் , பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.
இதன் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளியாகிக் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தற்போது இதிலிருந்து ஒரு பாடலின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஜோதிகா கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடலை நகுல் அபயங்கார் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார். கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி எனத் தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.