கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு…

கிளிநொச்சி, ஏ – 9 வீதியில் நேற்றிரவு(06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.