கிளிநொச்சி மாவட்டத்தில் மின்விநியோகத் தடை அமுலுக்கு..

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(02) மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை குறித்த இந்த மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கிளிநொச்சி, ஐயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம் முதலான பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மேலும் முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், 651 ஆவது பிரிவு இராணுவ முகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் மொகமட் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

(rizmira)