கிளைபோசேட் தடை நீக்கத்திற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது…

கிளைபோசேட் இரசாயன மருந்திற்கான தடையை நீக்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாதென ரஜரட்ட பல்கலலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியரான சன்ன ஜெயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளைபோசேட் தடை நீக்கம் தொடர்பில் அண்மையில் விவசாய அமைச்சர் வெளியிட்டிருந்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளைபோசேட் போன்ற இரசாயன மருந்து வகைகளுக்கு அனுமதி வழங்குவது தொலை நோக்கற்ற செயற்பாடாகும் என பேராசிரியர் சன்ன ஜெயசுமன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.