கிளைபோசைட் தடையானது தளர்கிறது…

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் கிளைபோசைட் உள்ளடங்கிய கிருமிநாசினியின் தடையினை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைத் தவிர சில பிரதேசங்களுக்கு விடுவிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கு யோசனை ஒன்றினை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பிரதேசத்தில் பரவிய சிறுநீரக நோயினால் குறித்த கிருமிநாசினி இலங்கையில் தடை செய்யப்பட்ட போதிலும், சில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மறைமுகமாக விநியோகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளைபோசைட் அடங்கிய இரசாயன கிருமிநாசினியின் தடையினைத் தொடர்ந்து தேயிலை மற்றும் இறப்பர் உள்ளிட்டவையிலும் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைவாக நெற் பயிர்ச் செய்கைக்கு கிளைபோசைட் அடங்கிய கிருமிநாசினியினை பயன்படுத்த தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்கைக்கு குறித்த கிருமிநாசினியினை பயன்படுத்த தடையினை நீக்க யோசனை முன்வைக்கபட்டுள்ளமையும் குறிபிடத்தக்கது.

 

#rishma