கிளைபோசைட் தடையை நீக்கி, உயிர்களை இழக்க விரும்பவில்லை – ஹெரிசன்…

கிளைபோசைட் தடையை நீக்குவதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக, கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இப​லோகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“கிளைபோசைட்டை கொண்டு வருவதற்கு தான் தனிப்பட்ட ரீதியில் தான் எதிர்ப்பை வெளியிடுகிறேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சிறிய குழந்தைகள் சிறுநீரக நோயால் இறக்கின்றனர். பதவியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேரும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 06 மற்றும் 07 வயது குழந்தை கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெற்றோர்கள் பூமியுடன் மோதி இறுதியில் துன்படைந்து இறப்பதை காண நான் விரும்பவில்லை. எனினும் தாம் இறந்து போனாலும், எதிர்கால பரம்பரையினர் வாழ வேண்டும் என இந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.