கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு…

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை(13) மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் மருத்துவ பீடத்தில் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவபீட மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்
போது. பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மருத்துவபீடத்தை நாளை மீள திறக்க இணக்கம் எட்டப்பட்டது.