கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

(FASTNEWS|COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று(05) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஷான் விஜயலால் டி சில்வா தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.