(FASTGOSSIP | COLOMBO) – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பரவலாக பேசப்பட்ட ‘டிகிரி’ எனும் யானை தொடர்பில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்;
‘ இவ்வளவு காலமும் தலதா பெரஹரவை வர்ணமயமாக்கியமைக்கு நன்றி..
உனது ஓய்வின் பின்னர், உனது இடத்திற்கு இளம் யானை ஒன்று பிரதியாகும்.
அதனைப் பார்த்து நீ ஆனந்தக் கண்ணீர் வடிப்பது நிச்சயம்..’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதனை சமூக வலைதளங்களில் வயது போன யானையாக ரணில் விக்கிரமசிங்கவையும் இளம் யானையாக சஜித் பிரேமதாசயையும் ஒப்பிட்டு கருத்துக்கள் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
පිංබර ටිකිරි, මෙතුවක් කල් උතුම් දළඳා පෙරහැර වර්ණවත් කලාට ඔබට පිං
විශ්රාමික ඔබෙන් හිස්වූ ඒ හිඩැස නුදුරේදී තරුණ ඇතෙකු සපුරනු ඇත …
ඒ දෙස බලා ඔබ සතුටු කඳුලු හෙලනා බව විශ්වාසය ????????
— Harin Fernando (@fernandoharin) August 18, 2019