கீதா’வின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நாளை பியசேனவுக்கு…

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டதை அடுத்து, குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நாளை(09) பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர் என்ற அடிப்படையில், 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த தினம் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

குறித்த இந்த தீர்ப்பு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அவரால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்ட, நிலையில் கீதா குமாரசிங்க போட்டியிட்ட காலி மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவரை பரிந்துரைக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை இன்று(07) நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

E – (reeshma)