கீதாவுக்கு பதவிக்கான அழைப்பாணையினை விடுத்தார் பிரதமர்..

அனைவரையும் விட பிரதமருக்கு என்மீது தனி விருப்பம் உள்ளது. இது தொடர்பில் யாரும் பொறாமைப்பட வேண்டாம் என்று கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய மூன்றாம் நாள் அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கவேண்டுமாயின் முதலில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என தான் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால், ரணில் விக்ரமசிங்கவும் ஆலோசகர் பதவியை வழங்கி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.