கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு இடைநிறுத்தம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்தம் செய்து உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடையுத்தரவை எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

(rizmira)