கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மகிந்தவிடம் வாக்கு மூலம் பெற செல்லும் சி. ஐ. டி…

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவு இன்று(17) காலை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின், கொழும்பு – 07 – விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்ல உள்ளது.

குற்ற விசாரணை பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர், மகிந்த ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள அவரின் இல்லத்திற்கு செல்ல உள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.