கீத் நொயார் தாக்குதல் – அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை..

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கீத் நொயாரை கடத்திச் சென்று மிக மோசமாக தாக்கியமை தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 22ஆம் திகதி சிறைச்சாலையில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கீத் நொயார் கடத்தப்பட்ட போது அனுர சேனாநாயக்க, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)