நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புளத்சிங்கள, மதுராவல, அகலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிக மழை வீழ்ச்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(rizmira)