குசலின் தடை குறித்த விளையாட்டுத் துறை அமைச்சரின் கருத்து பொய்?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவின் 4 வருட போட்டித் தடை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையின் உத்தியோகபுர்வ அறிவிப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருந்த கருத்து குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில், தற்காலிக போட்டித் தடையொன்றை மாத்திரமே அவருக்கு சர்வதேச கிரிக்கெட் சபை வித்திருந்தது.  குசலுக்கு இவ்வாறு 4 வருட போட்டித் தடையை சர்வதேச கிரிக்கெட் சபை விதிக்க வில்லையென, சர்வதேச கிரிக்கெட் சபையின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி பி.பி.சி. சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளது.

இதேவேளை,  தனக்கு இதுவரை உத்தியோகபுர்வ அறிவித்தல் எதுவும் கிடைக்க வில்லையெனவும், தான் எதிர்வரும் மே மாதத்திலேயே சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு முகம் கொடுக்கவுள்ளதாகவும் குசல் ஜனித், முன்னாள் தலைவர் மஹேலவிடம் குறிப்பிட்டுள்ளார்.

குழுக்காற்றுக் குழுவிடம் ஆஜராகி விசாரணை மேற்கொள்ளாமல் தடை உத்தரவுக்கான தீர்மானம் எவ்வாறு வெளியிடப்படும் எனவும் குசல் ஜனித் மஹேலவிடம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்கையில், விளையாட்டுத் துறை அமைச்சர் நேற்று குசலின் தடை குறித்து அமைச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உத்தியோகபுர்வ அறிவித்தல் கிடைக்கபெற்றுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.