குசலுக்கு போட்டித்தடை.. குசல்’ளின் போட்டித்தடை பொய்யானது.. குசலிடம் பேசுங்கள் – மஹேல

ஊக்கமருந்து பாவித்தமை குறித்த குற்றத்திற்காக ஆளாக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேரா’வுக்கு 4 வருட போட்டித்தடையினை சர்வதேச கிரிகெட் கவுன்சில் அறிவித்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை குசலின் போட்டித்தடைக்கான காலத்தை குறைக்க தாம் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்னும் ICC உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எதுஎவ்வாறாயினும், உலகப்புகழ் பெற்ற இணையத்தளமான Cricinfo இணையத்தளமும் இதுகுறித்த தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை..

அமைச்சர் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம் என மஹேல ஜெயவர்தன ட்விட்டர் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்..

குறித்த ட்விட்டர் செய்தியானது;

2

அதேவேளை, மஹேல இது குறித்து இன்னுமொறு பதிலினையும் ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார். அவர் கூறுவதாவது, “குசல் பற்றி பேசி.. குசலின் எதிர்காலம் குறித்து ICC தீர்மானம் ஒன்றை எடுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

1

மேலும், உலகப்புகழ் பெற்ற பத்திரிகை நிறுவனமான BBC, தொலைத் தொடர்பு அமைச்சரின் அறிக்கை தொடர்பில் சாமி உல் ஹஸன் BBC இற்கு தெரிவிக்கையில், குசல் குறித்த போட்டித்தடையில் எவ்வித உண்மையும் இல்லை. குசல் ஜனித் பெரேரா’விற்கு எதிரான ஊக்கமருந்து சோதனையானது இன்னும் ஆராயப்படவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்களின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் சில நேரங்களில் தெரியவரும்.. அதுவரை பொறுத்திருப்போம்..

எவ்வாறாயினும், குசல் என்பவர் நமக்கு மிகவும் வேண்டப்பட்ட வீரர்.. உண்மையில் அவர் பிழையாயின் தண்டனை கிடைக்க வேண்டும்.. அவரிடத்தில் பிழை இல்லையெனின் குறித்த அதிகாரிகள் குரல் கொடுக்கவும் வேண்டும்..