குசல் ஜனித் பெரேரா முக்கோண தொடரிலிருந்து நீக்கம்..

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த போட்டியின் போது தசைப்பிடிப்பிற்கு உள்ளாகிய இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் போட்டிகள் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுக்கு பதில் தனஞ்சய டி சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை மொத்தம் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தனஞ்சய கடைசியாக 2017 ஜூன் மாதம் இலங்கை சர்வதேச ஒருநாள் அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#rizma