குசும்தாசவின் பிணை மனு நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாமவின் பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பான வழக்கில் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.