கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதியன்று தங்காலை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், மற்றுமொரு சந்தேக நபரை இன்று(21) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை(22) தங்கல்லை, நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்காக, சந்தேக நபர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு தலைகவசங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.
