கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர், குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான 12ம் வகுப்பு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற சிறுமி, தனது செல்போன் மூலம் தோழிகளை அழைத்துள்ளார்.
பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தோழிகளுக்கு மதுவிருந்து கொடுத்த அந்த சிறுமி, மாலை வரை அங்கே இருந்துள்ளனர்.
தோழிகள் அளவாக மது அருந்திய நிலையில், காதல் தோல்வியில் இருந்த அந்த சிறுமி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார்.
இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த அவரது தோழிகளில் ஒருவர் தனது ஆண் நண்பரை அழைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவர் போதையில் இருந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார். ஆனால் அந்த சிறுமி போதையில் அந்த வாலிபரை ஆபாசமாக திட்டியதோடு, வாகனத்தில் ஏற மறுத்துள்ளார்.
இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். பின்னர் துடியலூர் சாலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சிறுமி தவறி சாலையில் விழுந்துள்ளார்.
போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் அங்கு மக்கள் கூடியுள்ளனர். மேலும் அந்த சிறுமி போதையில் இருந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த சிறுமி தன்னை மீட்க வந்த மக்களை காலால் எட்டி உதைத்ததோடு ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
அந்த சிறுமியை டாக்ஸி ஒன்றின் மூலம் காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தி வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று அவர்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும் பொலிசார் திவ்யாவுக்கு அறிவுரை கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=FTAWNlSuJZY” width=”560″ height=”315″]