குடிநீர், அருந்துவதற்கு உகந்ததல்ல – வெளியிடப்பட்ட அறிக்கை பிழையானது…

களுத்துறையில் சில பிரதேசங்களுக்கு இந்நாட்களில் வழங்கப்படும் குடிநீர், அருந்துவதற்கு உகந்ததல்ல என அறிக்கை வெளியிட்ட அதிகாரி குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கடிதங்கள் பிரிவின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக களு கங்கையுடன், கடல்நீர் சேருகின்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறானதொரு நிலை இதுவரையில் ஏற்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிழையான கருத்தினை முன்வைத்து வெளியிடப்பட்ட குறித்த அறிவித்தலினால் மக்கள் குழப்ப நிலைக்கு உள்ளாவதாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் தொடர்ந்தும் வழங்கப்படும் நீர், அருந்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு உகந்தது எனவும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இணைப்புச் செய்தி…

நிலவும் வறட்சியின் காரணமாக களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…

#rishma