குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் வாகனம் – 11 பேர் உயிரிழப்பு…

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் நேற்று இடம்பெற்ற டிரக் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுத்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு கார், 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 வீடுகள் இந்த விபத்தில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.