(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் 2 பெண் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, குறித்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானி உட்பட 03 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதில் 02 பெண் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.