கிரிஎல்ல – பகலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இதன்போது மற்றுமொரு பெண் காயமடைந்து கிரிஎல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பகலகம – கரதன பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரை இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.