குடும்பப் பெண் ஜனாஸாவாக மீட்பு

காத்தான்குடியில் குடும்பப் பெண் ஒருவர் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

இச்சம்பவம் நேற்று  திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது..

புதிய காத்தான்குடி-03, சென்றல் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் வசித்து வந்த நயிமா எனும் 41 வயது பெண் இன்று காலை அவரின் வீட்டிலிருந்தே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பெண், தனது வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு வழமை போன்று  ஞாயிறுக்கிழமை (27) இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். எனினும், பொழுது விடிந்த போதும் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திராமையால் உறவினர்கள் அவரை அவதானித்தபோது அவர் மரணித்திருந்தது தெரியவந்துள்ளது.

எனினும் மரணம் தொடர்பான வைத்திய பரிசோதனைக்காக ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.