இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் ரங்கன ஹேரத் விலகியுள்ளார்.
இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.
முதல் போட்டியில் காயம் காரணமாக குணரத்ன விலகியதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விலகினார்.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தும் முதுகுவலியின் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.