(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குண்டு தயாரிப்பது எப்படி என்பது பற்றி சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜர்ரட் வில்லியம் ஸ்மித் என்ற 24 வயதான அந்த இராணுவ வீரர் அமெரிக்காவின் பிரதான செய்தி வலையமைப்பு ஒன்றை வாகன குண்டு ஒன்றை கொண்டு தாக்குவது குறித்து விளக்கம் அளித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவர் தனது நண்பருடன் முகப்புத்தகத்தில் இடம்பெற்ற உரையாடலில் “சில நாட்களில் வெடிபொருளை மேம்படுத்தும் அறிவை நான் பெற்றிருக்கிறேன். ஆப்கானிஸ்தான் பாணியில் கையடக்க தொலைபேசி வெடி குண்டு ஒன்றை எம்மால் உருவாக்க முடியும். அதனை உங்களுக்கு என்னால் கற்பிக்க முடியும்” என்று அந்த இராணுவ வீரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனில் தீவிர வலதுசாரி குழு ஒன்றுக்காக போராட விரும்புவதாக இணையத்தில் குறிப்பிட்டிருப்பதாக அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.