பெல்ஜியம், ப்ருசல்ஸ் நகரில் சமீபத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பயங்கர தாக்குதலில் பொதுமக்கள் 34 பேரில் பலியாகியிருந்தனர். இன்னும், 100க்கும் மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. குறித்த தாக்குதலில் சுமார் 9 அமெரிக்கர்களும் உள்ளடங்குகின்றனர்.
நடப்பு இவ்வாறிருக்க , இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு ஆர்ஜன்டினா சென்றுள்ள ஒபாமா உட்பட குடும்பத்தினர் நேற்று இரவு இராப்போசனத்தில் வெகு கோலாகலமாக பங்குபெற்றிருந்தனர்.
ஆர்ஜன்டினா ஜனாதிபதி மெரிசியூ மெக்ரி மற்றும் அவரது மனைவி ஜூலியானா அவாடா ஆகியோரே ஒபாமா குடும்பத்தினருக்கு இவ்வாறு போசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
போசனத்திற்கு இடையில் நடன நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒபாமா நடனமாட வந்த மொடல் உடன் சேர்ந்து நடனமாடி கலக்கியுள்ளார்.
குறித்த நடனமானது;
[youtube url=”https://www.youtube.com/watch?v=Gcpy7sRszS8″ width=”560″ height=”315″]