இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார்.
இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சந்தோசத்தில் போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது திடீரென தலையில் ஏற்பட்ட வலி காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஸ்காட் வெஸ்ட்கார்த் பரிதாபமாக உயிரிழந்தார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சரிந்து உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


####