குப்பைகளை அகற்றுவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை வகுக்க கூறி உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்..

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாக குப்பைகளை அகற்றுவதற்கான தேசிய கொள்கை ஒன்றினை வகுக்குமாறு அரசிற்கு கட்டளையிடுமாறு கூறி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றினை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக மத்திய சுற்றாடல் அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)