கழிவுக் குழிக்குள் விழுந்து 04 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) வவுனியா , தாண்டிக்குளம் பிரதேசத்தில் கழிவுக் குழி ஒன்றுக்குள் விழுந்து 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு பேரும் நிலையத்தின் கழிவுக் குழியை சுத்தம் செய்ய சென்ற வேளையில் குறித்த குழியினுள் தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பின்னர் , அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ள போதும் , மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் உயிரிழந்திருந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.