குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதற்காக 80 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உட்பாதைகளில் குப்பை கூழங்களை ஒழுங்கான முறையில் அகற்றுவதற்காக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வாகனங்களையும் உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாளாந்தம் 50 மெற்றிக் தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்யக்கூடிய மத்திய நிலையங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வருடம் இந்தப் பணி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று திரு.இலங்சிங்க மேலும் குறிப்பிட்டார்.