குப்பை கூளங்களை ரயில் மூலம் அருவக்காட்டுக்கு எடுத்துச் செல்ல தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – கொழும்பின் குப்பை கூளங்களை ரயில் மூலம் அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எடுத்துச் செல்ல எதிர்வரும் 24ம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இன்றைய(19) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

குறித்த முறையானது வெற்றி பெரும் பட்சத்தில் இவ்வாறு குப்பைகள் ரயிலில் கொண்டு செல்வது தொடர்பில் மேலதிக அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.