கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி கொலன்னாவ, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேட்டு சரிவினால் வீடுகளை இழந்த மற்றும் வசிக்கின்ற வீடுகள் அதியுயர் அவதானத்துக்கு உட்பட்ட குடும்பங்கள் அவ்வீடுகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 91 குடும்பங்களுக்காக இதுவரை மாற்று வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 60 குடும்பங்கள் மாற்று வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அக்குடும்பங்கள் 60யும் உட்படுத்தி, இவ்வனர்த்தத்தினால் மேலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற 141 குடும்பங்களுக்காக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்காக வேண்டியும் 50,000 ரூபா வீட்டு வாடகை கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(rizmira)