முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குணரட்னத்தை நான்காவது முறையாகவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதில் அரசியல் நோக்கம் இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியினர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியை மீள கட்டியெழுப்பிய நபர்களில் குமார் குணரட்னம் முக்கிய நபராவார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மக்கள் விடுதலை முன்னணிக்குள் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து வெளியேறிய குமார் உட்பட முக்கிய தலைவர்கள் முன்னிலை சோசலிஸக் கட்சியை நிறுவினர்.
இந்நிலையில் குமார் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினர் இருப்பதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.