குமார் குணரத்னத்தின் பிணை தொடர்பான தீர்ப்பு இம்மாதம்

குடிவரவு, குடியகழ்வு சட்டத்தினை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு இந்த மாதம் 30 ஆம் திகதி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று(24) எடுத்துகொண்ட போது கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ், குறித்த தினம் வரை குமார் குணரத்னத்தை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது 30 நிமிடம் வரை குமார் குணரத்னம் சாட்சி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அவர், தனக்கு அரசியல் சம்பந்தமாக முகம் கொடுக்கவேண்டிய சம்பவங்களுடன் மேலும் பல்வேறு விடயங்களில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனோடு தான் எங்கு வாழ்ந்தாலும் மக்களுக்காக போராடுவேன் என மேலும் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.