உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சதம் அடித்த சங்ககாரவின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தும், நேற்று(24) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் விராட் கோஹ்லி. தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சதம் கடந்தது மட்டுமில்லால் 154 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் சதம் அடித்த கோஹ்லிக்கு இது 26 வது சதமாகும், இதன் மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சங்ககாரவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இவர் 404 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 93 அரைசதம், 25 சதம் என கடந்து அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்தார். தற்போது 26 வது சதம் அடித்துள்ள கோஹ்லி இவரை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜெயசூர்யா 445 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 68 அரைசதம், 28 சதம் என மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரின் சாதனையை முறியடிப்பதற்கு கோஹ்லிக்கு இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே தேவைப்படுவதால் அதையும் விரைவில் முறியடித்துவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.

